Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

பொத்துவில் முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.பதுர்கானின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

Posted on July 7, 2025 by Admin | 292 Views

பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான திரு ஏ. பதுர்கானின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அவரது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் சந்தேகமான செய்திகளுக்கு எவரும் பதிலளிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏதேனும் சந்தேகத்துக்குரிய தகவல்கள் வந்தால், உடனடியாக அதிகாரபூர்வ முறையில் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.