Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

அட்டாளைச்சேனையில் போதைப்பொருள் விற்பனை: இரட்டையர்கள் உட்பட மூவர் கைது

Posted on July 7, 2025 by Admin | 638 Views

அட்டாளைச்சேனை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூவரை, அக்கரைப்பற்று பொலிஸார் இன்று (06) கைது செய்துள்ளனர்.

போதைப் பொருள் வர்த்தக தொடர்பான ரகசிய தகவல் ஒன்றைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மூவர் கைதானனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் என்றும், மூன்றாவது நபரும் அவர்களுடன் தொடர்புடையவராக இருப்பது போல தெரியவந்துள்ளது.

கைதான சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 100 கிராம் ‘ஐஸ்’ எனப்படும் மெத்தம்பெட்டமின் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது விற்பனைக்காக வைத்திருந்ததென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் நாளை (07) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களுடன் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பந்தப்பட்ட வழக்கில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.