Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

தவிசாளர் முஷாரப்பின் தலைமையில்  புத்துயிர் பெறும் கோமாரி உச்சிமலை வீதி

Posted on July 7, 2025 by Admin | 435 Views

பொத்துவில் பிரதேச சபையின் PSDG–2025 வேலைத் திட்டத்தின் கீழ் கோமாரி உச்சிமலை வீதியின் நிர்மாணப் பணிகள் இன்று (07 ஜூலை 2025) கௌரவ தவிசாளர் எஸ். எம். எம். முஷாரப் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர் கௌரவ ரி. சுபோகரன், செயலாளர் ஏ. ஜீ. முபாரக், சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பல்வேறு பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த வீதி அமைப்பின் மூலம், குறித்த பகுதியின் போக்குவரத்து வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன், உள்ளூர் அபிவிருத்திக்கான முக்கியமான அடித்தள பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.