Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

அஷ்ரஃபின் மரணம் முதல் ஈஸ்டர் தாக்குதல் வரை: சர்ஜுன் நூல்கள் வெளியீடு

Posted on July 7, 2025 by Admin | 537 Views

அக்கரைப்பற்று அய்னா திருமண மண்டபத்தில், சட்டத்தரணியும் ஆய்வாளருமான சர்ஜுன் ஜமால்தீன் எழுதிய மூன்று முக்கியமான நூல்களின் வெளியீட்டு விழா கடந்த ஜூலை 4ஆம் திகதி நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நூல்கள்:

  • “இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும்”
  • “சாட்சியமாகும் உயிர்கள்”
  • “எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம்”

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவரான ஏ.எல்.எம். அதாவுல்லா, கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில், நூல்களின் உள்ளடக்கம், அதனுடைய சமூக மற்றும் அரசியல் பிணைப்பு குறித்து உரையாற்றப்பட்டதுடன், மேற்கண்ட நூல்கள் இலங்கை வரலாற்றின் முக்கியமான சம்பவங்களை ஆழமாகப் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.