Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

தவிசாளர் முஷாரப்பின் தலைமையில் புத்துயிர் பெறும் செங்காமம் புதிய நீர்வழங்கல் திட்டம்

Posted on July 7, 2025 by Admin | 370 Views

பொத்துவில் பிரதேச சபையின் PSDG–2025 வேலைத் திட்டத்தின் கீழ், செங்காமம் பிரதேசத்தில் நீர்வழங்கல் செயற்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய நீர்க்குழாய் பதிக்கும் பணிகள் இன்று (07 ஜூலை 2025) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

இந்த வேலைத்திட்டத்தை பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் தொடங்கி வைத்தார். நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் ஜே.எப். இஸ்ஹாஸ் அஹமட், செயலாளர் ஏ.ஜீ. முபாரக், அதிகாரிகள், ஊழியர்கள், சனசமூக நிலைய உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இந்த நீர்வழங்கல் திட்டம், வட்டார மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.