Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

அரச நிறுவனத் தலைவர்களுடன் தவிசாளர் முஷாரப்பின் முக்கிய கலந்துரையாடல்

Posted on July 7, 2025 by Admin | 365 Views

பொத்துவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 2025 ஜூலை 7ஆம் திகதி, பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் தலைமையில் ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.

பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அரசின் பல்வேறு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத் தலைவர்கள் (HOD) கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலில், பிரதேச அபிவிருத்திக்கு இடம்போகும் திட்டங்கள், தற்போது செயல்பாட்டில் உள்ள ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மேலும், அரச மற்றும் உள்ளூர் நிர்வாகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான யோசனைகள், நடைமுறை சிக்கல்கள் மற்றும் மேம்பாட்டு பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்த சந்திப்பு, மக்கள் சேவையை மேம்படுத்துவதற்கான தளத்தையும், இடைத்தரகர் இல்லாத நேரடி இணைப்பை உருவாக்கும் புதிய திசையையும் சுட்டிக்காட்டுகின்றன.