Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய அரசு நியமனங்கள்

Posted on May 20, 2025 by Arfeen | 206 Views

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவின்படி, தேசிய புத்தாக்க முகவராண்மையின் தலைமை அதிகாரியாக கலாநிதி முதித தர்ஷன செனரத் யாபா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் முன்னாள் செயலாளரான சம்பத் மந்திரிநாயக்க, தற்போது கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் புதிய பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளராக கலாநிதி பீ.கே. கோலித கமல் ஜினதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்களை உறுதி செய்யும் உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (மே 20) ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கினார்.