Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

18 இலட்சம் ரூபா வருமானத்திற்கு மேல் பெறுவோருக்கு வரி 10% வீதம் ஆக உயர்வு

Posted on May 20, 2025 by Hafees | 374 Views

2024 ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், வருடாந்தம் 18 இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானம் பெறுவோருக்கு விதிக்கப்படும் நிறுத்தி வைத்தல் வரி (Withholding Tax) 5% இலிருந்து 10% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, குறைந்த வருமானம் பெறுவோர் மீது இத்தகைய வரி பொறுப்பை ஏற்படுத்தாமல் இருக்க, சுய பிரகடனத்தை சமர்ப்பிக்க புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வங்கிக் கணக்குகள் திறக்கும் பொழுது வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) வழங்குவதையும் கட்டாயமாக்க, உள்நாட்டு வரிவிதி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் மந்திரிசபை அனுமதி வழங்கியுள்ளது.