Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

அதிவேக நெடுஞ்சாலையில் வேகக் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடும் அபராதங்கள்

Posted on July 31, 2025 by Admin | 129 Views

அதிவேக நெடுஞ்சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடுகளை மீறி மணித்தியாலத்திற்கு 120 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு GovPay செயலி மூலமாக அபராதம் செலுத்தும் வசதி இருந்தாலும், அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என காவல் துறையின் பொறுப்பாளர், பிரதிக் காவல்துறை மா அதிபர் இந்திக ஹபுகொட அறிவித்துள்ளார்.

மேலும், அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை திருத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதிய அபராதத் திட்டத்தின் படி:

  • மணித்தியாலத்திற்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் சென்றால் ரூ. 3,000 அபராதம்
  • 120 முதல் 130 கி.மீ வரை – ரூ. 5,000
  • 130 முதல் 140 கி.மீ வரை – ரூ. 10,000
  • 140 முதல் 150 கி.மீ வரை – ரூ. 15,000

இவற்றைக் கடந்துபோகும் வேகமானது, குறிப்பாக மணித்தியாலத்திற்கு 150 கிலோமீட்டரை தாண்டினால், நேரடியாக நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுவதாகவும் பிரதிக் காவல்துறை மா அதிபர் இந்திக ஹபுகொட எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேகக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், முறையற்ற வாகன ஓட்டம் தண்டனைக்குரியது என்பதையும் காவல்துறை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.