Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

அக்கரைப்பற்றிலிருந்து தேசிய மட்டத்திற்கு பெருமை சேர்த்த பிஷ்ரின்

Posted on August 8, 2025 by Admin | 375 Views

அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தராக பணியாற்றும் எம்.எஸ்.எம். பிஷ்ரின், தேசிய அளவில் வழங்கப்படும் சிறந்த தொழில் வழிகாட்டல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த விருது, மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) மற்றும் கொரிய அரசாங்கத்தின் KOICA நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் Career 1 தேசிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் இருந்து மொத்தம் 16 பேர் இந்த விருதுக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள நிலையில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிஷ்ரின் அவர்களும் இதில் இடம்பிடித்திருப்பது பகைமையற்ற பெருமையைக் கொடுக்கும் செய்தியாகும்.

விருது வழங்கும் நிகழ்ச்சி 2025 ஆகஸ்ட் 13 ஆம் திகதி கொழும்பு Waters Edge ஹோட்டலில் நடைபெறவுள்ளது. தொழில் வழிகாட்டல் துறையில் அவர் காட்டிய மேலான முயற்சியும், மாணவர்களின் எதிர்காலத்துக்காக அவர் செலுத்தும் அர்ப்பணிப்பும் இந்த விருதுக்கான அடித்தளமாக அமைந்துள்ளன.

மேலும் ஊடகத்துறையிலும் தனித்தன்மை வாய்ந்த குரல் வளத்துடன் பங்களித்து வருவது பிஷ்ரின் அவர்களின் கூடுதல் சிறப்பம்சமாகக் குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்றின் பெருமைமிகு பிஷ்ரின் அவர்களுக்கு, எங்கள் இதயபூர்வமான வாழ்த்துகள்!