Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

ரசிகர்கள் காத்திருக்கும் ஆசியக் கிண்ணம் இன்று ஆரம்பம்

Posted on September 9, 2025 by Admin | 398 Views

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 17வது ஆசியக் கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகிறது. தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹொங்கொங் அணியை எதிர்கொள்கிறது.

செப்டம்பர் 28 வரை நீடிக்கும் இந்த மாபெரும் தொடரில் ஆசியாவின் முன்னணி எட்டு அணிகள் கோப்பைக்காக மோதவுள்ளன.

இலங்கை அணி, வரும் சனிக்கிழமை தனது முதல் ஆட்டத்தில் பங்களாதேஷை சந்திக்கிறது. அதேவேளை, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் குழு நிலைப் போட்டியாக செப்டம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தொடருக்கான மொத்த 19 போட்டிகளில், 11 ஆட்டங்கள் டுபாயிலும், மீதமுள்ள எட்டு ஆட்டங்கள் அபுதாபியிலும் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நடப்பு சாம்பியனான இந்தியா, ஆசியக் கிண்ண வரலாற்றில் இதுவரை 8 தடவைகள் கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது. இலங்கை அணி 6 தடவைகள் சாம்பியனாகியுள்ளதுடன், பாகிஸ்தான் அணி 2 தடவைகள் கைப்பற்றியுள்ளது.