Top News
| கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு | | அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி |
Oct 15, 2026

நாட்டின் பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை 

Posted on October 10, 2025 by Admin | 402 Views

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கிழக்கு, மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன், பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் பிற பகுதிகளிலும் சில இடங்களில் பிற்பகல் நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை நேரங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதுடன், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டம் நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஆபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், அவற்றைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.