Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை – சந்தேக நபர் கைது

Posted on June 2, 2025 by Hafees | 397 Views

ஹொரணையில் உள்ள ரமுன மர ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களில் ஒருவர், வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு தொழிலாளியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்ததாக அங்குருவத்தொட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய, செவனகல பகுதியைச் சேர்ந்த 55 வயதானவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலை முடிந்ததும் இரண்டு தொழிலாளர்களும் இடைவேளை வாக்குவாதம் அதிகரித்தது. அதன் பின்னர் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

மொரன்ன, வரகா வெஹெரவைச் சேர்ந்த 52 வயது நபரை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டியுடன் கைதுசெய்துள்ளனர்