Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

க்ளென் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு

Posted on June 2, 2025 by Hafees | 475 Views

அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல், 50 ஓவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், இருபதுக்கு இருபது (T20) போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேக்ஸ்வெல் தனது ஆட்டத்திறமையாலும், பந்துவீச்சு மற்றும் அதிரடி ஆட்டங்களாலும் T20 போட்டிகளில் முக்கிய வீரராக உள்ளார். அவர் இந்த தீர்மானத்தை, தனது சீரான செயல்திறனையும் எதிர்காலத் திட்டங்களையும் கருத்தில் கொண்டு எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.