Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

சமாதான நீதவான் நியமன விதிமுறைகளில் திருத்தம் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Posted on June 6, 2025 by Admin | 398 Views

நீதிமன்ற அமைப்பைச் சீரமைக்கும் நோக்கில், சமாதான நீதவான் நியமனம் தொடர்பான விதிமுறைகளில் பல்வேறு முக்கியமான மாற்றங்களை அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வர்த்தமானி, ஏற்கனவே நியமிக்கப்பட்ட சமாதான நீதவான்களின் நியமனங்களை பாதிக்காது என நீதிமன்ற அமைச்சு உறுதியளித்துள்ளது.

புதிய திருத்தங்களில் முக்கியமாக, நிர்வாக மாவட்டங்களுக்கு சமாதான நீதவான் நியமிக்கப்படும் போது விண்ணப்பதாரர்கள்:

  • குறைந்தபட்சம் 30 வயதுக்கு மேல்
  • அதிகபட்சம் 75 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்
    எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முழு நாட்டுக்கான சமாதான நீதவான் பதவிக்கு, குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் நிர்வாக மாவட்ட சமாதான நீதவானாக இருக்க வேண்டும் என்ற புதிய விதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன், உயர்தர (A/L) பரீட்சையில் குறைந்தது ஒரு பாடத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயத் தகுதியாக இணைக்கப்பட்டுள்ளது