Top News
| நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் | | மாணவர்களுக்கு மகிழ்ச்சியளித்த அட்டாளைச்சேனை ரிபி ஜாயா வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா | | மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சூடுபிடித்த நுரைச்சோலை வீட்டுத் திட்டம் |
Feb 1, 2026

நாவிதன்வெளி அபிவிருத்தி பணிகள் குறித்து இன்று இடம்பெற்ற கலந்துரையாடல்

Posted on January 26, 2026 by Admin | 140 Views

நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ஆர்.ராகுலநாயகி அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (26.01.2026) நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித், பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.கோடீஸ்வரன் நாவிதன்வெளி பிரதேச சபை கௌரவ தவிசாளர் இ.ரூபசாந்தன், நாவிதன்வெளி பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், நாவிதன்வெளி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா மற்றும் திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்