Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை உயர்வு

Posted on April 5, 2026 by Admin | 244 Views

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

இந்த விலை திருத்தத்தின் படி 12.5 கிலோ கிராம் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாவால் உயர்த்தப்பட்டு அதன் புதிய விலை 4,765 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 கிலோ கிராம் கொண்ட கொள்கலனின் விலை 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 1,910 ரூபாயாக உள்ளது.

அதேபோல் 2.3 கிலோ கிராம் கொண்ட கொள்கலனின் விலையும் 140 ரூபாவால் உயர்த்தப்பட்டு அதன் புதிய விலை 890 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.