Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

27 வருட சுகாதார சேவையிலிருந்து மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்ப அத்தியட்சகர் றிம்சான் ஓய்வு

Posted on April 10, 2026 by Admin | 338 Views

(எம்.ஜே.எம்.சஜீத்)

27 வருட அரச சேவையிலிருந்து அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்ப அத்தியட்சகர் றிம்சான் (SuperintendentM.L.T) ஓய்வுபெற்றார்.

தனது 27 வருட அரச சேவையிலிருந்து இறுதியாக களுவாஞ்சிகுடி ஆதரார வைத்தியசாலையில் கடமையாற்றிய அட்டாளைச்சேனையை சேர்ந்த மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்ப அத்தியட்சகர் மீராமுகைடீன் முகம்மது றிம்சான் நேற்று (2026.04.09) ஓய்வு பெற்றார்.

தனது தொழில்முறை திறமையாலும் ஒழுக்கத்தாலும் சக ஊழியர்களிடமும் மேலதிகாரிகளிடமும் நல்ல மரியாதையையும் நம்பிக்கையையும் பெற்றிருந்தார். குறிப்பாக ஆய்வுகூட சேவைகளில் துல்லியமும் தரமும் பேணப்பட்டு நோயாளிகளுக்கான சரியான மருத்துவத் தீர்மானங்களுக்கு ஆதரவளித்தது அவரது பணியின் சிறப்பம்சமாகும்.

தனது ஆரம்ப கால சேவையினை மன்னார் ஆதார வைத்தியசாலை, அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலை, நிந்தவூர் ஆதார வைத்தியசாலை, பொத்துவில் ஆதார வைத்தியசாலை மற்றும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய அவர் தனது கடமைகளை முழுமையான அர்ப்பணிப்புடன் நிறைவேற்றி பொதுமக்கள் நலனில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். பலரின் வாழ்வில் நம்பிக்கையை உருவாக்கிய அவரது சேவை சமூகத்தில் உயர்ந்த மதிப்பைப் பெற்றுள்ளது.

27 ஆண்டுகள் தொடர்ந்து மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது சேவை சுகாதாரத் துறையில் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. அவரின் ஓய்வு வாழ்க்கை ஆரோக்கியம், அமைதி மற்றும் வளம் நிறைந்ததாக அமைய அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.