Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அபாகஸ் கணிதப் போட்டியில் சர்வதேசத்திற்கு தெரிவான பாலமுனை மாணவர்கள்

Posted on April 10, 2026 by Admin | 215 Views

(பாலமுனை செய்தியாளர்)

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி நடைபெற்ற அபாகஸ் துரிதக் கணிதப் போட்டியில் பாலமுனை College of Happy Kids மாணவர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளனர்.

2600க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் மொத்தம் 84 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. வயது பிரிவு மற்றும் கற்கைநெறி தர அடிப்படையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், குறித்த கல்வி நிலைய மாணவர்கள் திறமையுடனும் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் வெற்றிகளைப் பெற்றுள்ளனர். இம்மாணவர்கள் சர்வதேச மட்டப் போட்டிக்குத் தெரிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வெற்றிக்குப் வழிகாட்டியாக இருந்த டபிள்யு.நிஜாஸ் மற்றும் எஸ்.ஏ.நிஸ்ஃபான் ஆகிய பயிற்றுவிப்பாளர்களுக்கு கல்வி நிலையம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

சாதனையாளர்களின் விபரங்கள்:-

ஒன்லைன் போட்டி:

• HA. பார்ஸா ஹாஃபி – சாம்பியன்

• MN. சீனத் – சிறப்பு விருது (Merit)

• MI. யூசுப் – சிறப்பு விருது (Merit)

நேரடிப் போட்டி:

• HA. பார்ஸா ஹாஃபி – முதலாவது ரன்னர்-அப்

• MI. யூசுப் – முதலாவது ரன்னர்-அப்

• MN. சீனத் – இரண்டாவது ரன்னர்-அப்