Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள அஸ்வெசும கொடுப்பனவு

Posted on April 21, 2026 by Admin | 260 Views

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகள் நாளை (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

முதல் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 6 இலட்சத்து 17 ஆயிரத்து 406 முதியோருக்கான ஏப்ரல் மாதக் கொடுப்பனவாக ரூபாய் 3 பில்லியன் 87 மில்லியன் 30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

மேலும் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 72,525 முதியோருக்காக ரூபாய் 362 மில்லியன் 6 இலட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படவுள்ளதாக சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.