Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 14, 2026

மின்சாரக் கட்டண உயர்வால் நீர் கட்டணமும் உயர்வு

Posted on May 11, 2026 by Admin | 343 Views

மின்சாரக் கட்டண உயர்வின் தாக்கம் காரணமாக நீர் வழங்கல் கட்டணங்களையும் திருத்தியமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனடிப்படையில் நீர்க் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி மீளாய்வு எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வால் நீர் விநியோக சேவைக்கான செயல்பாட்டு செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதுவே புதிய கட்டண திருத்தத்திற்கான பிரதான காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

வழமையான நடைமுறைக்கு அமைவாக நீர்க் கட்டணங்கள் ஆண்டிற்கு இரு முறை மீளாய்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் இவ்வாண்டிற்கான அடுத்த கட்டணத் திருத்தம் ஜூன் மாத இறுதியில் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் புதிய கட்டண விவரங்களும் ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.