Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

இலங்கையில் வாகனங்களின் விலை உயர்வு

Posted on May 16, 2026 by Admin | 126 Views

அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

சந்தையில் நிலவும் மாற்றங்களின் தாக்கத்தால் வாகனங்களின் விலைகள் சுமார் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி சில பிரபல வாகனங்களின் விலைகளில் எதிர்பார்க்கப்படும் உயர்வு குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

Raize வகை வாகனத்தின் தற்போதைய விலை 140 இலட்சம் ரூபாயாக உள்ள நிலையில் அது மேலும் 8 முதல் 10 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vezel வாகனத்தின் விலை சுமார் 12 இலட்சம் ரூபாயால் உயரக்கூடும் என்றும் Yaris வாகனத்தின் விலையில் 4 முதல் 5 இலட்சம் ரூபாய் வரையிலான அதிகரிப்பு ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் Land Cruiser வாகனத்தின் விலை தற்போதைய சந்தை சூழ்நிலைக்கு அமைவாக சுமார் 30 இலட்சம் ரூபாயால் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விலை உயர்வுகள் எதிர்வரும் சில வாரங்களுக்குள் அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.