Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

ஜனாதிபதி கலந்து கொள்ளும் கூட்டத்தில் முஸ்லிம் அதிகாரிகளுக்கான நேரத்தை மாற்றுமாறு உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

Posted on May 17, 2026 by Admin | 240 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்க அவர்கள் கலந்துகொள்ளும் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்திற்காக அம்பாறை மாவட்ட அரச திணைக்களங்களின் முஸ்லிம் அதிகாரிகள் பிற்பகல் 12.30 மணிக்கு வருகை தருமாறு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்திருந்தார்.

எனினும் அதே தினம் அந்நேரத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை இடம்பெறுவதால் முஸ்லிம் அதிகாரிகள் குறித்த நேரத்தில் கலந்து கொள்வதில் அசெளகரியங்கள் உள்ளதனால் குறித்த கலந்துரையாடலுக்கான நேரத்தை பிற்பகல் 1.30 மணிக்கு மாற்றுமாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்கிரமராச்சி முஸ்லிம் அதிகாரிகள் பிற்பகல் 1.30 மணிக்கு வருகை தரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையிடம் தெரிவித்துள்ளார்.