(அட்டாளைச்சேனை செய்தியாளர்- சியாத்)
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் நோயாளிகளுக்கான சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகக் காணப்பட்ட மருந்துப் பொதிகள் (Tablet Packets) அட்டாளைச்சேனை காலை வட்ட (Morning Circle) கிரிக்கெட் அணியினரால் அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி (DMO) வைத்தியர் எஸ்.எம்.எம். வாபாவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தாதி உத்தியோகத்தர் ஏ.எல். ஜெசீல், மேற்பார்வையாளர் என்.எம். தாரிக் உள்ளிட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் , காலை வட்ட கிரிக்கெட் அணியின் முகாமையாளர் நஃபீஸ்தீன், சட்டத்தரணி சஃப்ராஸ், FFF Fashion நிறுவனத்தின் உரிமையாளரும் அணியின் வீரருமான பஸ்மீர், MXON Lanka (Pvt) Ltd நிறுவன முகாமையாளர் எம்.எல்.எம். ஸியாத், நிகாஸ், இம்ரான் உள்ளிட்ட அணியின் முக்கிய உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
