Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

அட்டாளைச்சேனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இக்ரஹ் வட்டாரத்திற்கான புதிய நிருவாகம் தெரிவு

Posted on June 7, 2026 by Admin | 228 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- றிப்கி)

அட்டாளைச்சேனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) உறுப்பினர் வலையமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இக்ராஹ் வட்டாரக்குழுக் கூட்டமும் புதிய நிர்வாகக் குழுத் தெரிவும் நேற்று(06) விசேடமாகக் கூட்டப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றது.

கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளரும், முன்னாள் உதவித்தவிசாளருமான ஜெளபர் (PRO) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டதுடன் இக்ராஹ் வட்டாரத்தின் தற்போதைய அபிவிருத்தி நடவடிக்கைகள், மக்கள் எதிர்கொள்ளும் தேவைகள் மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளை எவ்வாறு திட்டமிட்டு முன்னெடுப்பது என்பது தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தின் முக்கிய அங்கமாக வட்டாரத்தின் செயற்பாடுகளை வீரியத்துடன் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளூர் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.