Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

சுகாதார சேவை கடனுதவிச் சங்க பணிப்பாளர் சபைக்கு உமீர் தெரிவு

Posted on June 15, 2026 by Admin | 275 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- வாஜித்)

கண்டியில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட சுகாதார சேவை சிக்கன கடனுதவிச்சங்கத்தின் பணிப்பாளர் சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பதில் மேற்பார்வையாளர் (Overseer) எஸ்.ஏ. உமீர் அவர்கள் சங்க உறுப்பினர்களின் அதிகூடிய வாக்குகளைப் பெற்று பணிப்பாளர் சபை உறுப்பினராகத் தெரிவாகி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

அவரது இந்த வெற்றியைப் பாராட்டி கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை சமூகத்தினரால் இன்று (15) வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் சிறப்புப் பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது வரலாற்றுத் தடம் பதித்த எஸ்.ஏ. உமீர் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டு வைத்தியசாலை குழாத்தினரால் அமோக கௌரவிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.