Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மீராசாஹிபு அப்துல் மஜீட் காலமானார்

Posted on June 30, 2026 by Admin | 192 Views

(பொத்துவில் செய்தியாளர்- அஹ்ஸன்)

பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான மீராசாஹிபு அப்துல் மஜீட்(SSP) அவர்கள் இன்று 30 (செவ்வாய்க்கிழமை) காலமானார்.

அன்னாரின் ஜனாசா தற்போது கொழும்பு, கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலம் பொலிஸ் துறையில் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றிய அவர் பின்னர் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைக்குத் தெரிவாகி சமூகப்பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.