Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் கைது

Posted on September 4, 2026 by Admin | 113 Views

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை ஒன்றின் நிமித்தம் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, அவர் இன்று முற்பகல் அங்கு முன்னிலையாகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரிடம் விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை அடுத்தே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.