Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

நுவரெலியா பாடசாலைகளுக்கு நாளை விடுமுறையா?

Posted on September 20, 2026 by Admin | 94 Views

நுவரெலியா கல்வி வலயத்தில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை (21) பாடசாலைகளை நடத்துவதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்படுமாயின் அது குறித்த தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் அந்தந்தப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரதேசத்தின் காலநிலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளை வழமை போன்று நடத்துவதா அல்லது தற்காலிகமாக மூடுவதா என்பதை உரிய பாடசாலை அதிபர்களே சுயமாகத் தீர்மானிப்பர் என நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.