Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

வைத்தியர் அர்ஜுனா, முன்னாள் அமைச்சர் ஹரீஸ் ஆகியோர் மீது வைத்தியர் சுகுணன் வழக்கு

Posted on September 22, 2026 by Admin | 98 Views

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட அவதூறு மற்றும் இனமோதலைத் தூண்டும் வகையிலான கருத்துக்களுக்கு எதிராக புதிய இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தின் (Online Safety Act) கீழ் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘ஹிஜாப்’ விவகாரம் தொடர்பிலேயே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், வைத்தியர் அர்ஜுனா உள்ளிட்ட ஆறு நபர்களும், யூடியூப் (YouTube) மற்றும் பேஸ்புக் (Facebook) ஆகிய இரண்டு சமூக வலைத்தள பக்கங்களும் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த சமூக வலைத்தளப் பதிவுகள் மற்றும் பிரதிவாதிகளுக்கு எதிராகத் தடையாணை அல்லது நிபந்தனையுடன்கூடிய கட்டளையைப் பிறப்பிப்பது குறித்த பரிசீலனைக்காக வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது, முறைப்பாட்டாளரான வைத்தியர் சுகுணன் சார்பாக சட்டத்தரணிகளான டயஸ் மற்றும் க. கிசோபனா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.