Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளுக்கு 260 ஆண்டுகள் வரை கடூழிய சிறை

Posted on September 23, 2026 by Admin | 133 Views

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரையான கடூழியச் சிறைத்தண்டனைகளை விதித்து கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதி செய்தமை, தற்கொலைதாரிகளுக்கு உடந்தையாகச் செயற்பட்டமை மற்றும் தீவிரவாதப் பிரசாரங்களை முன்னெடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்த 15 பிரதிவாதிகள் மீதும் சந்தேகமற நிரூபிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் சற்றுமுன்னர் இந்தத் தண்டனை விபரங்களை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை விபரங்கள் பின்வருமாறு:

 5 குற்றவாளிகளுக்கு: தலா 200 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

 மேலும் 5 பேருக்கு: தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

 4 பேருக்கு: தலா 240 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

 ஒருவருக்கு: 260 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

அத்துடன் குறித்த 15 குற்றவாளிகளுக்கும் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களையும் உடனடியாக அரசுடைமையாக்குமாறும் (பறிமுதல் செய்யுமாறும்) நீதிபதிகள் குழாம் தனது தீர்ப்பில் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.