Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

40 வருட வரலாறு கொண்ட அட்டாளைச்சேனை மஸ்ஜிதுர் றவாஹா பள்ளிவாசல் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

Posted on October 2, 2026 by Admin | 126 Views

அட்டாளைச்சேனை கடற்கரையை அண்மித்து அமைந்துள்ள 40 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட மஸ்ஜிதுர் றவாஹா பள்ளிவாசலின் கட்டடப் புனரமைப்புப் பணிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு பள்ளிவாசலின் தலைவர் எம்.ஏ. ரபாஸ் தலைமையில் நேற்று (01) சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பள்ளிவாசலின் செயலாளர் என்.எம். நஜாத் வரவேற்புரையாற்றியதுடன் சுனாமிப் பேரனர்த்தத்தின் போது பாதிப்புகளுக்குள்ளான இப்பள்ளிவாசல்்நீண்ட காலமாக வலுவிழந்த நிலையில் காணப்பட்டதனாலும
பிரதேச மக்களின் நன்மை கருதியும் இதனைப் புனரமைத்து நவீன வசதிகளுடன் நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக அக்கரைப்பற்று தாறுல் ஹக் அரபுக் கல்லூரியின் அதிபர் அல்-ஹாபிழ் எஸ். றியாஸ்தீன் (ஹக்கானி) கலந்துகொண்டு ‘இறையில்லத்தின் மாண்பும் சமூகக் கட்டமைப்பும்’ எனும் தொனிப்பொருளில் சிறப்புரையாற்றினார். பள்ளிவாசல்கள் வெறும் வணக்கஸ்தலங்களாக மட்டுமன்றி சமூகத்தை நல்வழிப்படுத்தும் மையங்களாகவும் திகழ வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கல்வித்துறைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் அண்மையில் வெளியான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த இம்மஹல்லாவை சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு இந்நிகழ்வின் போது நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், பிரதேச சபை உறுப்பினரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல். பாயிஸ், கண்ணியமிக்க உலமாக்கள், ஓய்வுநிலை அதிபர் எம்.ஏ. அன்சார், அதிபர்களான எம்.ஐ. அஜ்மீர், ஐ. ரியாஸ், பிரபல தொழிலதிபர் ஏ.கே. அமீர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், தனவந்தர்கள், பிரதேச மீனவ சமூகத்தினர், இளைஞர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.