அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேசத்தின் 6, 7 மற்றும் 8ஆம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்ட ‘கோணாவத்தை பிரீமியர் லீக்’ கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வு இச்சுற்றுப்போட்டியின் தலைவர் எஸ். கியாத் தலைமையில் (18.06.2026) நேற்று கோணாவத்தை பொது விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளரும் மத்திய குழுச் செயலாளருமான எஸ். சபான் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் (YMMA) அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் அதிபர் றியாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிரதேச இளைஞர்களிடையே ஒற்றுமையையும் விளையாட்டுத் திறனையும் கட்டியெழுப்பும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் விளையாட்டு வீரர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






