Top News
| இரண்டு வருடங்கள் கடந்தும் நிர்மாணிக்கப்படாத அட்டப்பள்ளம் பாலம்! நாளை பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி | | தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி அப்துல் முனாஸின் புதல்வர் அய்யாஸ் பொறியியல் பட்டம் பெற்றார் | | அட்டாளைச்சேனை அல்-ஜென்னாஹ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஐ.எம்.றியாஸ் கடமையேற்பு |
Oct 24, 2026

அம்பாறை மாவட்டத்தைக் கலக்கவுள்ள “லீடர் அஷ்ரப் கிண்ணம்” கிரிக்கெட்டின் முன்னாயத்தப் பணிகள் தீவிரம்

Posted on October 20, 2026 by Admin | 63 Views

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் நடாத்தப்படவுள்ள “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ரியா மசூர் தலைமையில் நேற்று (18) அட்டாளைச்சேனை பீச் கெஸ்ட் ஹவுஸில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் குறித்த சுற்றுப்போட்டியைச் சிறப்பாக நடாத்துவது தொடர்பான பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, கட்சியின் பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், அம்பாறை மாவட்ட செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.உவைஸ், உதவிக் கல்விப் பணிப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல். பாயிஸ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ. கலீல், கட்சியின் உயர்பீட உறுப்பினர் பாமி மன்சூர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.