அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் நவீன காலத்திற்கு ஏற்ற பொழுதுபோக்கு மற்றும் நிகழ்வுக் கலாசாரத்தை அறிமுகப்படுத்தும் நோக்கிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘மேற்கு வாசல்‘ திறப்பு விழா நேற்று (24) சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை மீலாத் நகரில் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான சூழலில் அமைக்கப்பட்டிருக்கும் மேற்கு வாசலானது மக்கள் தமது குடும்ப நிகழ்வுகள், நண்பர்களின் ஒன்றுகூடல்கள் (Get-togethers), பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் வரவேற்பு வைபவங்களை மனநிறைவுடன் நடத்துவதற்கான ஒரு பிரத்தியேக தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திறப்பு விழாவில் பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள், வர்த்தகப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு புதிய முயற்சிக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
நவீன வசதிகளுடன் கூடிய மேற்கு வாசலில் இயற்கையான காற்றோட்டமும் ரம்மியமான காட்சிகளும் நிறைந்த சூழலில் வருகை தருவோரின் மனதைக் கவரும் வகையில் பின்வரும் சகல ஏற்பாடுகளும் இங்கு ஒருங்கே அமைக்கப்பட்டுள்ளன.
இயற்கை எழில் சூழ்ந்த காட்சிகளை ரசித்தவாறு நிகழ்வுகளை நடத்தக்கூடிய திறந்தவெளி மற்றும் மண்டப வசதி (Spacious Hall with Scenic View), நிகழ்வுகளுக்குத் தேவையான உணவுகளை உடனுக்குடன் சமைத்துப் பரிமாறுவதற்கான சகல உபகரணங்களையும் கொண்ட சமையலறை (Fully Equipped Kitchen Access), இரவு நேரக் கொண்டாட்டங்கள் மற்றும் நண்பர்களின் ஒன்றுகூடல்களை மெருகூட்ட பிரத்தியேக ‘பார்பிகியூ’ (BBQ Party) வசதி, அதிநவீன ஒலி அமைப்பு (Sound System) மற்றும் வருகை தருவோருக்கு வசதியான ஆசன ஏற்பாடுகள் (Comfortable Seating), தாராளமான வாகன தரிப்பிட வசதி (Parking Space) மற்றும் சுத்தமான கழிப்பறை வசதிகள் (Washroom Facilities) உள்ளன.
நீங்கள் இனிய நினைவுகளை உருவாக்குங்கள், அதற்கான சிறந்த இடத்தை நாங்கள் வழங்குகிறோம்“ (You Make the Memories, We Provide the Place) எனும் தொனிப்பொருளில் தமது சேவையை ஆரம்பித்துள்ள ‘மேற்கு வாசல்’ நிர்வாகத்தினர், பிரதேச மக்கள் தமது மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டாட இனி வெளியிடங்களைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை எனத் தெரிவித்தனர்.
வைபவங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கான முன்பதிவுகள் தற்போது மேற்கு வாசலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலதிக விபரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு 0772382524 அல்லது 0757850641 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.




