Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

ஆதம்பாவா எம்.பியின் முயற்சியால் சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம வீதிகள் அபிவிருத்தி

Posted on October 25, 2026 by Admin | 85 Views

சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்டக் கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் உள்ளக வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் நேற்று (24) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் விசேட முயற்சியின் பயனாக முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக தலா 100 மீட்டர் நீளம் கொண்ட ஏழு உள்ளக வீதிகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் காணப்பட்ட இவ்வீதிகள் செப்பனிடப்படுவதன் மூலம் அப்பகுதி மக்களின் அன்றாடப் போக்குவரத்துச் சிரமங்கள் நீங்குவதுடன் பாதுகாப்பானதும் இலகுவானதுமான பயண வசதிகள் உறுதி செய்யப்படும் எனப் பிரதேச மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.