நாடளாவிய ரீதியில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நாளை (27) செவ்வாய்க்கிழமை நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போதைய சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்த அபாயங்களைக் கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (க.பொ.த சா/த) பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் எவ்வித மாற்றமுமின்றி ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வி அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. குறித்த செய்முறைப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்கள் வழமை போன்று பரீட்சைகளில் கலந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.