அட்டாளைச்சேனை அக்/அல்-ஜென்னா வித்தியாலயத்தின் அலுவலகப் பயன்பாட்டுக்கான புதிய சுழல் கதிரை மற்றும் ஆவணக் கோப்புப் பெட்டிகள் என்பன இன்று (28) பாடசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
பாடசாலையின் புதிய அதிபராகக் கடமையேற்றுள்ள எம்.ஐ.எம். றியாஸின் தனிப்பட்ட முயற்சியின் பயனாக அவரது பாடசாலை நண்பரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையின் சகோதரருமான சமாதான நீதவான் எம்.எஸ்.எம். இஸ்ஸதீனின் ‘எம்.எஸ்.எம். இஸ்ஸதீன் ஜே.பி. பௌண்டேசன்’ ஊடாக இவ்வுபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த பௌண்டேசனின் செயலாளர் ஆர். றசீனினால் வழங்கப்பட்ட இப்பொருட்களை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் ஏ.எல்.எம். பசீல், பழைய மாணவர் சங்கச் செயலாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எப். முகம்மது பௌமி ஆகியோர் இணைந்து பாடசாலை சார்பில் பெற்றுக்கொண்டனர்.
பாடசாலையின் தேவை கருதி இவ்வுதவியை வழங்கிய பௌண்டேசனின் ஸ்தாபகர் மற்றும் நிர்வாகத்தினருக்கு அதிபர் இதன்போது தனது நன்றிகளைத் தெரிவித்தார்.