Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு தேவையை விட அதிக உரம் விநியோகிக்க நடவடிக்கை

Posted on October 31, 2026 by Admin | 155 Views

அம்பாறை மாவட்ட விவசாயிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக மாவட்டத்தின் மொத்தத் தேவையையும் விட அதிகளவிலான உரங்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவரும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தலைமையில் அம்பாறை மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்கிரமாரச்சியின் ஏற்பாட்டில் அண்மையில் (28) அம்பாறை மாவட்ட செயலக ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது மேற்படி தகவல் வெளியிடப்பட்டது.

அம்பாறை மாவட்டத்திற்குத் தேவையான 15,252.53 மெட்ரிக் தொன் யூரியா உரத்திற்குப் பதிலாக 19,612 மெட்ரிக் தொன் உரத்தைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன் 1,616.39 மெட்ரிக் தொன்னாகக் காணப்படும் ‘TSP’ உரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 2,230 மெட்ரிக் தொன் உரமும், 1,736.88 மெட்ரிக் தொன்னாகவுள்ள ‘MOP’ உரத் தேவைக்காக 3,486.51 மெட்ரிக் தொன் உரமும் விநியோகிக்கப்படவுள்ளன.

குறித்த உரத் தொகையை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் நிறுவனங்கள் ஊடாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளதால் இம்முறை விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவை விடவும் கூடுதலான உரங்களைப் பெற்றுக்கொடுக்க முடியும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, அபூபக்கர் ஆதம்பாவா, கே. கோடீஸ்வரன், மஞ்சுல சுகத் ரத்நாயக்க, சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன ஆகியோருடன் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.