Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

கிழக்கு மாகாணத்தை அதிரவைக்கவுள்ள ‘லீடர் அஷ்ரப் கிண்ணம்’ கிரிக்கெட் ஏற்பாடுகள் தீவிரம்

Posted on November 1, 2026 by Admin | 153 Views

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படவுள்ள ‘லீடர் அஷ்ரப் கிண்ணம்’ (Leader Ashraff Trophy) மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஏற்பாடுகள் குறித்த விசேட ஆலோசனைக் கூட்டம் நேற்று (31) கல்முனையில் நடைபெற்றது.

கட்சியின் அம்பாறை மாவட்டக் காரியாலயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இச்சுற்றுப்போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான முன்னேற்றங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் போட்டிகளை நடத்துவது தொடர்பான இறுதித் தீர்மானங்களும் எட்டப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, சட்டத்தரணி ஹபீப் றிபான் ஆகியோருடன் கட்சியின் பிரதித் தலைவர்களான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித் , கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளருமான எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன், உதவிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.ரி. சப்ராஸ், அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ.சி. சமால்தீன், இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர் எம். முஸ்மி, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் உள்ளிட்ட அம்பாறை மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச மற்றும் இளைஞர் அமைப்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.