Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

கொழும்பிலிருந்து திருக்கோவில் நோக்கி பயணித்த RS Express வெலிகந்தையில் விபத்து

Posted on November 6, 2026 by Admin | 861 Views

கொழும்பிலிருந்து திருக்கோவில் நோக்கிப் பயணித்த அதிசொகுசுப் பேருந்து ஒன்று, வெலிகந்தை பகுதியில் இன்று (06) வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ‘ஆர்.எஸ். எக்ஸ்பிரஸ்’ (RS Express) என்ற தனியார் அதிசொகுசுப் பேருந்தே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

குறித்த பேருந்து வெலிகந்தை பிரதேசத்தை அண்மித்துப் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியுள்ளது. விபத்து நிகழ்ந்த போது பேருந்தில் கணிசமான அளவு பயணிகள் இருந்த போதிலும் நல்வாய்ப்பாக எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டனர்.

இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.