Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

மாகாண மட்ட முஸ்லிம் கலாசார ‘அதான்’ போட்டியில் அக்கரைப்பற்று முனவ்வறா ஜூனியர் கல்லூரி மாணவன் ஹாமித் முதலிடம்

Posted on November 10, 2026 by Admin | 69 Views

கிழக்கு மாகாண மட்ட முஸ்லிம் கலாசாரப் போட்டியில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரி (Junior College) மாணவன் எஸ்.என்.ஏ.ஹாமித் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தரம் 9, 10, 11 ஆகிய சிரேஷ்ட பிரிவு மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற ‘அதான் கூறல்’ (பாங்கு சொல்லுதல்) போட்டியிலேயே குறித்த மாணவன் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி முதலிடத்தைத் தனதாக்கியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் தேசிய மட்டப் போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம்மாணவன் இப்போட்டியில் சாதனை படைப்பதற்குப் பின்புலமாக இருந்து வழிகாட்டிய கல்லூரியின் அதிபர் ஏ.எல்.சதீலா, பிரதி அதிபர் எம்.ஆர். தாஹா, உதவி அதிபரும் கலாசாரக் குழுத் தலைவருமான மௌலவி எம்.ஐ.எம். பைசல் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களான மௌலவி ஏ. அமீருல் அன்சார், ஆசிரியை எம்.எச். நஸீரா, ஆசிரியை எஸ்.எப். சக்கியா ஆகியோரின் அர்ப்பணிப்புப் பாராட்டுக்குரியது.

தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவன் எஸ்.என்.ஏ. ஹாமித், தேசிய மட்டத்திலும் வெற்றிவாகை சூட வேண்டும் எனக் கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர், கலாசாரக் குழுவினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் தமது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.