Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

லாஃப்ஸ் எரிவாயு விலையேற்றம்: கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் அதிரடி உயர்வு!

Posted on November 14, 2026 by Admin | 75 Views

லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் திடீர் விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவகங்களில் விற்பனை செய்யப்படும் சிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகளை உடனடியாக அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய சிற்றுண்டி வகைகளின் விலையை 5 ரூபாயினாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலையை 15 ரூபாயினாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை பாரியளவில் அதிகரித்துள்ளது. இந்த விலைத் திருத்தத்திற்கு அமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாயினாலும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 732 ரூபாயினாலும் உயர்த்தப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் அதிகரிப்பினால் உணவகத் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் நட்டத்தை ஈடுசெய்யும் முகமாகவே உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.