Top News
| இரண்டு வருடங்கள் கடந்தும் நிர்மாணிக்கப்படாத அட்டப்பள்ளம் பாலம்! நாளை பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி | | தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி அப்துல் முனாஸின் புதல்வர் அய்யாஸ் பொறியியல் பட்டம் பெற்றார் | | அட்டாளைச்சேனை அல்-ஜென்னாஹ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஐ.எம்.றியாஸ் கடமையேற்பு |
Oct 24, 2026

தரம் 06க்கு தயாரிக்கப்பட்டுள்ள ஆங்கிலப் பாடத்தின் தொகுதியில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் இணையதளம் அச்சிடப்பட்டுள்ளதாக விசாரணை

Posted on December 30, 2025 by Admin | 518 Views

தேசிய கல்வி நிறுவனம் (NIE) தயாரித்து தற்போது அச்சிடப்பட்டுள்ள 6 ஆம் ஆண்டு ஆங்கில மொழிப் பாடத்திற்கான ஒரு கற்றல் தொகுதியில்(module) ஒரின சேர்க்கையை ஊக்குவிக்கும் இணையதளத்தின் பெயர் இடம்பெற்றுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த முறைப்பாடு சரியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த கற்றல் தொகுதியின் விநியோகத்தை உடனடியாக நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நாளை (31) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.