Top News
| உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின | | காலி ரயில் நிலையத்தில் பற்றி எரியும் ரயில் பெட்டிகள் | | நீர் வெட்டு தொடர்பாக வெளியான அறிவிப்பு |
Apr 2, 2026

இலங்கையில் ஒரே நாளில் 13000 ரூபாவால் சரிந்த தங்கத்தின் விலை

Posted on March 19, 2026 by Admin | 2216 Views

உலக சந்தையில் தங்கத்தின் விலை சரிவடைந்ததைத் தொடர்ந்து இலங்கையிலும் தங்க விலைகள் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சந்தைத் தரவுகள் காட்டுகின்றன.

இன்றைய (19) நண்பகல் நிலவரப்படி கொழும்பு செட்டியார் தெருவில் நிலவும் விற்பனைத் தகவல்களின் அடிப்படையில், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ.13,000 குறைந்து ரூ.362,500 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை இன்றைய காலை நேரத்திலேயே தங்கத்தின் விலை ரூ.9,000 அளவுக்கு குறைந்திருந்தது. அந்த சரிவு தொடர்ந்ததன் விளைவாக நண்பகல் வரை மேலும் ரூ.4,000 குறைந்து மொத்த வீழ்ச்சி அதிகரித்துள்ளது.

நேற்று (18) 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ.374,400 ஆக இருந்த நிலையில் இன்று அது கணிசமாகக் குறைந்துள்ளது.

மேலும் நேற்று ரூ.407,000 ஆக இருந்த 24 கரட் தங்கப் பவுண் விலை இன்று ரூ.394,000 வரை சரிந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.