Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

சிமெந்து விலை மீண்டும் உயர்வு

Posted on March 24, 2026 by Admin | 277 Views

கட்டுமானத் துறையில் அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளினால் சிமெந்து விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

அதன்படி ஒரு சிமெந்து மூட்டையின் விலை ரூ.150 முதல் ரூ.175 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பே இந்த விலை திருத்தத்திற்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை நாட்டின் கட்டுமானத் துறையில் மணல், கல், இரும்பு உள்ளிட்ட அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களின் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் டெரிங்டன் போல் தெரிவித்துள்ளார்.