Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

முழு கிழக்கு மாகாணத்திற்கே பெருமை சேர்த்த உதுமாலெப்பை எம்பி

Posted on April 4, 2026 by Admin | 505 Views

2026ம் ஆண்டிற்கான வரவு–செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பிற்கான விவாதங்கள், வாக்கெடுப்பு 2025 டிசம்பர் 5ம் திகதி வரை மொத்தம் 22 பாராளுமன்ற அமர்வுகளில் நடைபெற்றுள்ளன.

225 பாராளுமன்ற உறுப்பினர்களில் வெறும் 09 பேர் மட்டுமே இந்த அமர்வுகளின் அனைத்து நாட்களிலும் (100%) முழுமையாகக் கலந்து கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யும் manthiri.lk இணையதளம் வெளியிட்டுள்ளது.

அந்த முழு கலந்துகொள்ளல் பட்டியலில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 03 உறுப்பினர்களில் ஒரே ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக அம்பாரை மாவட்டத்தின் அட்டாளைச்சேனையை சேர்ந்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் எம். எஸ். உதுமாலெப்பை இடம்பெற்றிருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

மக்கள் நலனுக்காக இடையறாது பொறுப்புணர்வுடன் கடமையை நிறைவேற்றும் மக்கள் பிரதிநிதி என்ற நிலைப்பாட்டை உதுமாலெப்பை மீண்டும் தன்னை நிரூபித்துள்ளதுடன் முழு கிழக்கு மாகாணத்திற்கும், தன்னை தெரிவு செய்த மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் 06 பேர் 20%க்கும் குறைவாகவே அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளதாகவும் அதே அறிக்கை குறிப்பிடுகிறது.

👉நீங்கள் நம்பிக்கையுடன் வாக்களித்து தெரிவு செய்த உங்கள் பிரதிநிதிகள் இந்தப் பொறுப்புணர்வான பட்டியலில் உள்ளார்களா?