Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

ஈரானுக்கு 48 மணி நேரம் காலக்கெடு விதித்த டிரம்ப்

Posted on April 4, 2026 by Admin | 322 Views

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது அல்லது ஒரு இணக்கப்பாட்டை எட்டுவது குறித்து ஈரானுக்கு இன்னும் சுமார் 48 மணித்தியாலங்களே மீதமுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது ‘ட்ரூத்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதற்காக ஈரானுக்கு முன்னதாக 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த அவகாசம் தற்போது நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் விரைவான தீர்மானம் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.