Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

ஈரான்–அமெரிக்க உயர்மட்ட பேச்சு ஆரம்பம்

Posted on April 11, 2026 by Admin | 264 Views

ஈரான்–அமெரிக்க உறவில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் தொடங்கியுள்ளதாக ஈரானின் அரச ஊடகமான IRIB தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் நேரடியாக நடைபெறுகின்றனவா அல்லது இடைத்தரகர்கள் மூலம் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது குறித்து இதுவரை தெளிவான விளக்கம் வெளியாகவில்லை. இதனால் பேச்சுவார்த்தையின் தன்மை குறித்து இன்னும் ஐயப்பாடு நீடிக்கிறது.

ஒருவேளை இவை நேரடிப் பேச்சுவார்த்தைகள் என உறுதிப்படுத்தப்பட்டால் 1979 ஆம் ஆண்டு ஈரானிய இஸ்லாமியக் குடியரசு உருவானதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் முதல் உயர்மட்ட நேரடி தொடர்பாக இது வரலாற்றுச் சிறப்பை பெறும்.

தற்போது பலவீனமான போர்நிறுத்த சூழ்நிலையின் மத்தியில் இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாலும் அதன் நோக்கம், வரம்புகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் முடிவுகள் குறித்து இரு தரப்பும் இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ அறிக்கைகளையும் வெளியிடவில்லை.