Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளர் திடீர் ராஜினாமா

Posted on April 17, 2026 by Admin | 322 Views

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பணிகள் சுயாதீனமாகவும் நீதியுடனும் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து எரிசக்தி அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் பதவிகளை விலகியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.